திருக்கோவிலுார் வழியாக தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை

85பார்த்தது
திருவண்ணாமலையிலிருந்து, விழுப்புரம் வழியாக சென்னை, தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயிலை, பா. ஜ. , வினர் வரவேற்று இனிப்பு வழங்கினர்.


திருவண்ணாமலையிலிருந்து, திருக்கோவிலுார், மாம்பழப்பட்டு, விழுப்புரம் வழியாக சென்னை, தாம்பரத்திற்கு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களும், மறு மார்க்கத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. 22-Sep-2024
திருவண்ணாமலையில் காலை 3: 30 மணிக்கு புறப்பட்டு திருக்கோவிலுாருக்கு 4: 10 மணிக்கும், தாம்பரத்திற்கு 8: 30 மணிக்கும் சென்றடையும். அதேபோல் தாம்பரத்தில் மாலை 5: 00 மணிக்கு புறப்பட்டு இரவு 9: 57 மணிக்கு திருக்கோவிலுார் வந்தடையும். ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பா. ஜ. , சார்பில் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி