திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் உள்ள கருவேப்பிலைபாளையம் - சிறுலாப்பட்டு பழைய தார்சாலை சேதமான நிலையில் இருந்தது. இதனால் இப்பகுதியில் மழை பெய்தால் சேரும் சகதியுமான காட்சியலித்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிரமத்தை போக்கும் வகையில் நேற்று தார்சாலை அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.