சென்னை ஐஐடி கேண்டினில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கேண்டீன் பணியாளர் ஸ்ரீராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.