விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் நெல் சாகுபடி விளைநிலங்களில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. இதனால் விளைநிலங்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கின்றன. நோய் தாக்கத்துடன் அதிக வெப்ப அலை வீசுவதால் நெற்பயிர்கள் சில இடங்களில் காய்ந்து அழுகியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.