கஞ்சா கடத்தியவர் கைது

50பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் ரயில் நிலையத்தில் நேற்று காலை 10: 00 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரின் பையை இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் சோதனையிட்டனர். பையில் 14 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் கிருஷ்ணன், 25; என்பது தெரியவந்தது.

பி. எஸ். சி. , பட்டதாரியான இவர், ஆந்திராவில் கிரானைட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அங்கு ஒடிசாவை சேர்ந்த சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் மூலம் கஞ்சா வாங்கி சொந்த ஊருக்கு ரயிலில் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து கிருஷ்ணனை கைது செய்து, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி