திருக்கோவிலுார் , தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் மகள் அனீஸ் பாத்திமா. நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.
இவரை திருக்கோவிலுார் முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கத்தினர் நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி, பாராட்டி கவுரவித்தனர்.
சங்கத் தலைவர் சேகர், பொருளாளர் முஜீர்கான், செயலாளர் கல்யாண் குமார், மாவட்டத் துணைத் தலைவர் கங்காதரன், உறுப்பினர்கள் ஜோசப், மணி, பாரிவள்ளல், சீனிவாசன், தாஹிர் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.