விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் வயல்களில் கடந்த ஒரு வாரமாக நெல் அறுவடை பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அறுவடை செய்த நெல்லை தனியார் கொள்முதல்தாரரிடம் நெல் ரகம் ADT-37 நெல் ஒரு மூட்டை ரூ. 1450 க்கு கொள்முதல் செய்தனர். மேலும், கடந்த மாதம் பெய்த மழையினால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நெல் மூட்டைகள் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.