திண்டிவனம் கல்லுாரி மண்டல அளவிலான கோகோ போட்டியில் முதலிடம்

79பார்த்தது
திண்டிவனம் கல்லுாரி மண்டல அளவிலான கோகோ போட்டியில் முதலிடம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டிலுள்ள விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோகோ விளையாட்டு போட்டி விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழக மைதானத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் இரண்டு மாவட்டங்களை சேர்ந்த 16 கல்லுாரிகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஆண்கள் பிரிவில், திண்டிவனம் கோவிந்சாமி அரசு கலைக் கல்லுாரி முதலாவது இடத்தையும், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அதிகாரி பரிசு வழங்கி பாராட்டினார். உடன் திண்டிவனம் அரசு கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் சிவராமன், விழுப்புரம் அரசு கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் ஜோதிபிரியா உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி