விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

52பார்த்தது
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
திண்டிவனத்தில் பா. ம. க. , நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இறகு பந்து போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.

திண்டிவனம் பாண்டியன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மாவட்டங்களுக்கு இடையிலான இறகு பந்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது. போட்டியை திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் மருத்துவமனை டாக்டர் பரசுராமன் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாய் அணி முதல் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும், ஜூனியர் பிரிவிற்கான போட்டியில் திண்டிவனம் பி. எஸ். ஏ. , அகாடமியைச் சேர்ந்த ஜெய்சன் மற்றும் வருண் அணி முதல் இடத்தையும், ஜோஷ்வா பால் மற்றும் சிவா அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற அணிக்கு பாட்டாளி சமூக ஊடகப்பேரவை மாநிலச் செயலாளர் முகுந்தன் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். பா. ம. க, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போட்டி ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி