இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டிவனம் நகராட்சியை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் பழனி கண்டன உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் பிரகாஷ், அறிவழகன், தேவநாதன், கண்ணதாசன், சத்தீஷ்குமார், முருகன், மா. கம்யூ. , ராமதாஸ், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், திண்டிவனம் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ரயில்வே மேம்பாலத்தில் நகரும் மின் படிக்கட்டு அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்டக்குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி