திண்டிவனம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சரவணன், 35; இவர், நேற்று முன்தினம் தனதுசொந்த ஊரான ஒலக்கூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்று பின் பைக்கில் மாலை ஊர் திரும்பினார். வீட்டின் அருகே வந்தபோது, சேலத்திலிருந்து மாதவரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து சரவணன் தந்தை உத்திரம், 61; கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.