திண்டிவனத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி

68பார்த்தது
திண்டிவனத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரங்கநாதன்(39). இவர் அவரது மகன் திண்டிவனம் அடுத்த தென்கோடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விமல்ராஜ்(16), படித்து வரும் நிலையில், அவருக்கு பள்ளி கட்டணம் கட்டுவதற்கு அவரது மனைவி அலமேலு (32), மகன் ஆகிய மூன்று பேரும் வீட்டிலிருந்து பள்ளிக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது திண்டிவனம் அடுத்த கருணாவூர் பாட்டை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் விழுப்புரம் மார்க்கமாக இருந்து சென்னை மார்க்கமாக சென்ற கார், பைக் மீது அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அலமேலு கணவன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். ரங்கநாதன் மற்றும் அவரது மகன் விமல்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த அலமேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you