தமிழ்நாடு அரசின் சார்பில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் 'கலைஞர் கனவு இல்லம் திட்டம்' அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதில், 2030ஆம் ஆண்டுக்கள் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.1,051.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடுகள் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கும் வகையில், மேலும் ரூ.400 கோடியை அரசு விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.