சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜெஸ்ஸி (34). விவாகரத்தான இவர் மறுமணம் செய்ய மேட்ரிமோனியில் பதிவு செய்த நிலையில் கோவையை சேர்ந்த லெனின் மோகன் (34) என்பவர் அறிமுகமானார். ஜெஸ்ஸியிடம் திருமணம் ஆசை காட்டிய லெனின் ரூ. 3 லட்சம் வரை ஏமாற்றி சொகுசாக இருந்த நிலையில் புகாரின் பேரில் போலீசார் அவரை நேற்று (டிச. 17) கைது செய்தனர். விசாரணையில், விவாகரத்தானவர்களையும் விதவைப் பெண்களையும் குறிவைத்து பல கோடி மோசடி செய்தது தெரிந்தது.