பாதாள சாக்கடை பள்ளம் சிக்கிய அரசு பேருந்து

585பார்த்தது
திண்டிவனம் நகரத்தில் பாதாள சாக்கடை பணி அலட்சியமாக நடைபெறுவதால் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள். பாதுகாப்புடன் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ராஜாஜி சாலையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் அதில் சிக்கி கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த இடத்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் சிறுசிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
இந்த விபத்து நடந்த சுமார் 200 மீட்டர் தொலைவில் நேற்று காலை பெண்ணாடத்தில் இருந்து திண்டிவனத்திற்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி இதேபோன்று பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது விபத்துக்குள்ளானது.

தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் அலட்சியப் போக்குடன் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு உரிய பாதுகாப்புடனும், கவனத்துடனும் பாதாள சாக்கடை பணியானது நடைபெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி