நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் பொறுப்பு

74100பார்த்தது
நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் பொறுப்பு
பாஜகவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியது தெரிந்ததே. அதன்பின் சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி