காவலர் பயிற்சி பள்ளியில் பயின்ற போலீசாரின் சங்கமம் நிகழ்ச்சி

82பார்த்தது
காவலர் பயிற்சி பள்ளியில் பயின்ற போலீசாரின் சங்கமம் நிகழ்ச்சி
திண்டிவனத்தில், போலீஸ் பணியில் 36 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்து பணியாற்றியவர்களின் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

சென்னை அருகிலுள்ள பரங்கிமலை காவலர் பயிற்சி பள்ளியில் 1988 பயிற்சி பெற்ற போலீசார், கடலுார், விழுப்புரம் மற்றும், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சப் இன்ஸ்பெக்டர்கள் முதல் டி. எஸ். பி. , க்கள் வரையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து அவ்வப்போது சந்தித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இந்த குழுவில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட போலீசார், நண்பர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இதே போல் இந்த குழுவை சேர்ந்தவர்களின் நான்காவது சந்திப்பு நிகழ்ச்சி, திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டலில் நேற்று காலை நடந்தது. இதில் டி. எஸ். பிக்கள் அருள்மணி, திருவேங்கடம் தலைமை தாங்கி பேசினர். சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளித்த ராஜசேகர், ரவி ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் அப்பண்டைராஜ், லோகநாதன், கோவிந்தசாமி, ராமதாஸ், சப்இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், சீத்தாபதி, செல்வம், நடராஜன், வெங்கடேசன், சத்யா, சுந்தரேசன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி