திண்டிவனம்அருகே லாரி மீது கார் மோதி தம்பதி உள்பட 3பேர் காயம்

73பார்த்தது
திண்டிவனம்அருகே லாரி மீது கார் மோதி தம்பதி உள்பட 3பேர் காயம்
சென்னை கே. கே. நகர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 40). இவர் சென்னையில் இருந்து காரில் ஊட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாரத விதமாக அந்த பஸ்சை உரசியபடி முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதிவிட்டு சாலையோர தடுப்பு கட்டையின் மீது மோதி நின்றது. கார் மோதியதில் மினி லாரி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த சென்னையில் இருந்து வீட்டை காலி செய்து கொண்டு சே. குன்னத்தூர் பகுதிக்குசென்று கொண்டிருந்த விழுப்புரம் சே. குன்னத்தூர் பகுதியை சேர்ந்தசங்கர் (35), இவருடைய மனைவி வேதவல்லி(35), மகன் தேவா (10) ஆகிய மூவரும் காயம் அடைந்தனர். மினி லாரி டிரைவர் ஆனந்தபாபு காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகதிண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான கார், மினி லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி