கால்வாய் அமைக்கும் பணியை கிடப்பில் போட்டதால் பொதுமக்கள் அவதி

59பார்த்தது
கால்வாய் அமைக்கும் பணியை கிடப்பில் போட்டதால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டம், மயிலம், காந்திநகர் பகுதியில் 2வது தெருவில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக அங்கிருந்த கல்வெர்ட்டை உடைத்து விட்டனர். ஆனால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், அந்த தெருவில் கார், ஆட்டோ போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி