விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதி செல்லபிராட்டி ஊராட்சியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K. S. மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் அண்ணாத்துரை, துரை, அணி அமைப்பாளர் தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.