சட்டமன்ற மதிப்பீட்டு குழு திண்டிவனத்தில் ஆய்வு

64பார்த்தது
திண்டிவனத்தில் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தரம் உயர்த்தப்பட்ட தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணியினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையானது தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் காட்டுமன்னார்கோவில் எம் எல் ஏ சிந்தனை செல்வன் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் எக்மோர் எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி