மயிலம் அருகே தீ விபத்து ரூ. 5 லட்சம் பொருட்கள் சேதம்

524பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாகுல். இவர் கூட்டேரிப்பட்டில் உள்ள மேம்பால கீழ் பகுதியில் தீவனூர் சாலையில் சோபா தயார் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அந்த கடையையொட்டி இரும்பு தகர கொட்டகையால் குடோன் அமைத்து ஷோபாவிற்கு பயன்படுத்தும் ஹோம் எனப்படும் பஞ்சுகளை வைத்திருந்தார். இன்று மாலை அந்த குடோனில் இருந்து திடீரென புகை வந்ததால் அக்கம்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உள்ளே செல்ல வழி இல்லாததாலும், இரும்பு தகரம் என்பதால் உள்ளே இருக்கும் பஞ்சு முழுவதும் தீப்பிடித்து இருந்ததால் வெப்பம் மிகுதியால் இரும்பு தகரத்தை நகர்த்த முடியாததால் எளிதில் உள்ளே சென்று அணைக்க முடியவில்லை. பின்னர் அருகில் இருந்த மரக்கிளைகளை கொண்டு பக்கவாட்டின் இரும்பு தகடை பெயர்த்து உள்ளே தீயை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் கடை முழுவதும் தீப்பரவியதால் குடோனில் இருந்த பஞ்சு முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி