விழுப்புரத்தில் நடந்து வரும் தமிழக அரசின் கனவு இல்ல வீடு கட்டும் பணியை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். தமிழக அரசு சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணி நடந்து வருகிறது.
ஒன்றியம் வாரியாக திருவெண்ணெய்நல்லுாரில் 346, மரக்காணம் 296, காணை 432, செஞ்சி 290, வல்லம் 397, முகையூர் 253, மயிலம் 304, வானுார் 280, விக்கிரவாண்டி 399, ஒலக்கூர் 269, கண்டமங்கலம் 333, கோலியனுார் 267, மேல்மலையனுார் 244 வீடுகள் என 13 ஒன்றியங்களில் 4, 110 வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. அதற்கான வீடுகள் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் அடுத்த மேலமங்கலம் ஊராட்சியில் கட்டப்படும் வரும் வீட்டின் கட்டுமானப் பணியை, பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உடனிருந்தார்.