தாழ்வான மின் கம்பிகள் கிராம மக்கள் சாலை மறியல்

56பார்த்தது
திண்டிவனம் அருகே தாழ்வான மின்கம்பிகளால் விபத்து அபாயம் உள்ளதாகவும், சீரான மின்சாரம் வழங்கப்படாதவை கண்டித்தும், குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தக் கோரியும் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அம்மணம் பாக்கம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உரசியபடி மிகவும் தாழ்வாக மின்கம்பிகள் செல்வதால் விபத்து அபாயம் இருப்பதாகவும், இங்குள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சீரான முறையில் வழங்கப்படாததால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைவதுடன், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் இங்குள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தரவில்லை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட கிராமங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி