"விஜய் அரசியலுக்கு போனால் என்ன? விஜயை தாண்டி வசூல் கொடுக்க இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். விஜய் இடத்துக்கு வரவும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். சினிமா எப்போதுமே ஒருவரை நம்பியே இருக்காது. ஒருவர் போனால் மற்றொருவர் அந்த இடத்திற்கு வந்து விடுவார். அதனால் விஜய் சினிமாவை விட்டு போனதும் அது ஒன்றும் பெரிய இழப்பாக எங்களுக்கு இருக்காது" என்று கூறி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.