வெள்ளிமேடு பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம்

52பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பேட்டை கிராமத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பில் "மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்" நடைபெற்றது.

முகாமிற்கு ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் விளக்கவுரை ஆற்றினார். தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார். ஒலக்கூர் ஒன்றிய குழு தலைவர் பாங்கை சொக்கலிங்கம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜாராம், திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் சிவா, மாவட்ட ஊராட்சிக்குள் உறுப்பினர் மனோ சித்ரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை அன்பரசி, வெங்கடேசன், ஏழுமலை, வடிவேல், சங்கர், செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஊராட்சி மன்ற தலைவர் மேனகா சரவணன் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி