திண்டிவனம் BSNL அலுவலக நுழைவு வாயில் முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா. ஜ. க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், வட்டாரத் தலைவர்கள் செல்வம், புவனேஸ்வரன், காத்தவராயன், சூரியமூர்த்தி, சக்திவேல், மாவட்ட பொருளாளர் கருணாகரன், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், செய்தி தொடர்பாளர் வெங்கட், சுரேஷ்பாபு, காளியம்மாள், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.