தூங்கச் செல்வதற்கு முன்னர் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஹார்ட் ஜார்னல் டிஜிட்டல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் மொபைல் ஃபோன்களில் இருந்து வெளிப்படும் குறைந்த அளவிலான கதிரியக்க அதிர்வெண் ஆற்றல் இரத்த அழுத்த அதிகரிப்புடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இது இளம் மற்றும் நடுத்தர வயது உடையவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.