சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையிலும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்று சக்தியுடன் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி உலகளவில் அதிகரித்து வருகிறது. சவுதி அரேபியாவில் ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 635 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும், 45 பயணிகள் இதில் பயணிக்கலாம்.