கிடங்கல் கோட்டை கோவிலில் 58ம் ஆண்டு ஆடி கிருத்திகை

63பார்த்தது
திண்டிவனம், கிடங்கல் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்ப நாயக ஈஸ்வரர் சிவாலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி தெய்வயானை உடனுறை ஆறுமுகப் பெருமானுக்கு 58ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் கோபூஜையுடன் துவங்கி விழாவில் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நந்திகேஸ்வரர் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்பட்டது. பின்னர் செடல் ராட்டினத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது.
அதே போல் மூலவர் அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் அன்ப நாயக ஈஸ்வரருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு அகழிக் குளக்கரையிலிருந்து சக்தி கலசம் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று காலை சக்திவேலுக்கும், காவடிகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும் பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும், மழுவடி சேவையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி