செஞ்சி பஸ் நிலையம் திறப்பு ஒத்திவைப்பு

3704பார்த்தது
செஞ்சி பஸ் நிலையம் திறப்பு ஒத்திவைப்பு
செஞ்சி பஸ் நிலைய திறப்பு விழா வரும் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செஞ்சி பஸ் நிலையம் 6. 73 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தை அமைச்சர் மஸ்தான் முன்னிலையில், நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் நேரு நாளை 1ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு பகுதியில் முகாமிட்டு அமைச்சர்கள் நிவரண பணிகளை மேற்கொண்டு வருவதால் பஸ் நிலையம் திறப்பு விழா வரும் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் மொக்தியார் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you