சர்வீஸ் ரோடு தார் போடாமல் அரைகுறையாய் விட்ட 'நகாய்'

59பார்த்தது
சர்வீஸ் ரோடு தார் போடாமல் அரைகுறையாய் விட்ட 'நகாய்'
புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எண். 77ன் விரிவாக்க பணிகள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. பைபாசில் ஐந்து மாதங்களாக போக்குவரத்து துவங்கி நடக்கிறது. மண் சாலையாக இருப்பதால் மழையின் போது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சகதியில் தடுமாறி கீழே விழுகின்றனர். மழை இல்லாத நாட்களில் லாரி டிராக்டர்கள் செல்லும் போது புழுதி கிளம்பி இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் படிந்து விடுகிறது. போக்குவரத்து குறைவாக உள்ள சர்வீஸ் சாலைகளில் தார் சாலை அமைத்து விட்டு அதிக போக்கு வரத்துள்ள மிக முக்கிய இடத்தில் தார் சாலையாக அமைக்காமல் மண் சாலையாக அறைகுறையாக இருப்பதால் பொது மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடர்புடைய செய்தி