தமிழக வெற்றிக்கழகத்தில் பதவிகளுக்கு பணம் வசூலில் ஈடுபட்டால் கட்சி பதவி பறிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்ச ரூபாய் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு விஜய் வாய்மொழி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.