காதலர் தினத்துக்கு ரீரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் '96'

69பார்த்தது
காதலர் தினத்துக்கு ரீரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் '96'
விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் '96'. 90 களில் பிறந்தவர்களின் காதலை தத்ரூபமாக திரையில் செதுக்கிக்காட்டிய இந்த படம் வழக்கமான படங்களில் இருந்து வேறுபட்டு எளிமையான கதையுடன் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய படமாக இருக்கிறது. தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு '96' திரைப்படம் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி