சினிமாவில்தான் விஜய், உதயநிதியை விட பெரிய நடிகர். ஆனால் அரசியலில் விஜய்யை விட உதயநிதிதான் பெரிய ஆள் என என நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உதயநிதிக்கு அரசியலில் நெழிவு சுழிவு நன்றாகத்தெரியும். விஜய்யைப் பார்த்து முதல் கேள்வியாக, தீடீரென ஏன் இந்த அரசியல்? இவ்வளவு ஆண்டுகளாக எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு இப்போதுமட்டும் ஏன் அரசியலுக்கு வர்றீங்க? எனக் கேட்பேன்" என்று கூறியுள்ளார்