தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், “மக்கள் நலன், நாட்டு நலன், வளர்ச்சி குறித்து கவலைப்படாமல் எந்தெந்த வழிகளில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நம் முதல் வேலை. தவெக நிர்வாகிகள் இளைஞர்களாகவே இருந்தால் என்ன தவறு?. அண்ணாதுரை, எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது உடன் இருந்தவர்கள் இளைஞர்கள் தான்” என்றார்.