சாம்பியன் டிராபி தொடரில் இந்தியாவுக்கு ஆதரவாக ஐசிசி செயல்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சாம்பியன் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதுகுறித்து பேசிய பேட் கம்மின்ஸ், இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் ஒரே மைதானத்தில் நடப்பது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது என்றார்.