தருமபுரி மாவட்டம் அரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “கூட்டுறவு சங்கத்தில் பல முறைகேடுகளை செய்துவரும் செயலரார் எஸ். விஜயகுமார், மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு சேமிப்புக் கணக்குகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டனர்.