ஆந்திராவில் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை தவிர்த்து மற்ற மதுபானங்களின் விலையை கலால் துறை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (பிப்.11) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பீர் வகைகள் மீது 15 சதவீத விலையை உயர்த்தியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா அரசுகளின் இந்த முடிவு மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.