சுவையான மாதுளை பழம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இந்த பழம் முழுவதுமே விதைகளால் நிரம்பியுள்ளது, மாதுளையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன. இவை புற்றுநோய், இதயநோயை எதிர்த்து போராடும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்து ரத்தவிருத்தி ஏற்படும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாதுளை விதை, உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.