கிருஷ்ணாகிரி: போச்சம்பள்ளியில் போதை ஆசாமி ஒருவர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலம்பட்டியை சேர்ந்த சரவணன் மதுபோதையில் காவல் நிலையத்தில் ரகளை செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த சரவணன், பொய் வழக்கு பதிந்துவிட்டதாக காவல் நிலையம் முன் உள்ளாடையுடன் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.