தேர்வு மனஅழுத்தம் காரணமாக 20 வயது பல் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பயின்று வரும் பல் மருத்துவக்கல்லூரி மாணவி சௌமியா (20) தனது வீட்டின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தேர்வு தொடர்பாக ஏற்கனவே பயத்தில் இருந்த சௌமியா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.