அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கில் இன்று (ஜன., 10) தீர்ப்பு வெளியாகிறது. 2002ஆம் ஆண்டு சென்னை மாநாகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அதிமுக உறுப்பினர்கள் அளித்த புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யபட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.