சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 07) தீர்ப்பளிக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருந்தது. இதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.