ரயில்வே இடம் ஆக்கிரமிப்பு: விவரங்களை சேகரிக்கும் வருவாய்துறை

84பார்த்தது
ரயில்வே இடம் ஆக்கிரமிப்பு: விவரங்களை சேகரிக்கும் வருவாய்துறை
விழுப்புரம்- திருப்பதி இரட்டை வழிப்பாதையாக்கும் திட்டம், வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் மேம்படுத்தும் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்காக ரயில்வேயின் ஆக்கிரமிப்பு உள்ள நிலத்தை மீட்க தென்னக ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி வேலூரில் வசந்தபுரம், இந்திராநகர், அவுலியாநகர், பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மேற்கண்ட பகுதிகளில் உண்மையிலேயே வசிப்பிடம் இல்லாமல் எத்தனை பேர் உள்ளனர்? , எத்தனை வீடுகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது? , வசிக்கும் மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வேலூர் தாசில்தார் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்த அறிக்கை வேலூர் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி