மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம்!

56பார்த்தது
மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம்!
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.

செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விழிப்புணர்வு வாகனத்தில் மழைநீர் சேமிப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும். இந்த வாகனம் மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி நிர்வாக பொறியாளர் குமரவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி