நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு காவலாளி போலீசாரிடம் அத்துமீறிய செயலுக்கு சீமானின் மனைவி மன்னிப்பு கேட்டுள்ளார். சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு விசாரணைக்குச் சென்ற போலீசுக்கும், காவலாளிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, காவலாளி கைது செய்யப்பட்டார். இப்பெரும் பரபரப்பை அடுத்து வீட்டுக்கு வெளியே வந்த சீமானின் மனைவி கயல்விழி, காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷிடம் மன்னிப்பு கேட்டார்.