அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அஇஅதிமுக-வைக் கண்டாலே இந்த முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை. இருந்தாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் கழக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும் , சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம்” என குறிப்பிட்டுள்ளார்.