சம்மன் கிழக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வந்த காவலர்கள், வீட்டு காவலாளி இடையே மோதல் மூண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக சீமான் வீட்டு காவலாளியை போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர். இதனிடையே செய்தி சேகரிக்கச் சென்ற நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஸ் செய்தியாளர்களை ஒருமையில் பேசி மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.