லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது!

81பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் நேற்று நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்றிருந்த பிச்சனூர் காளியம்மன்பட்டி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மோகன் (வயது 38), போஸ்பேட்டை ஆண்டியப்பன் தெருவை சேர்ந்த இளங்கோ (40) ஆகியோரை பிடித்து சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி